நாளைய உதயம்
நீ கோபப்டாதே!
கலங்காதே!
நீ செய்தவைகள்
எல்லாம் போதும்
உன்னால்தானே
ஓராயிரம்
கட்சிகள் உருவாக்கம்
இனி
நீ ஓய்வெடு
புதியவர்கள்
புது உலகம்
சமைக்கட்டும்
நீ விட்டதவறுகளே
உனக்கு உறைக்கட்டும்
கிழக்கில் இருந்து
உதிக்கட்டும்.
இரா.குணசீலன்